சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் 2018.04.22 பிற்பகல் 2 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் கழக தலைவர் திரு. ஜோ. டிசாந்தன் தலைமயில் நடைப்பெற்றது.
இவ் விழாவில் ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ கே. நிமலேஸ்வரக் குருக்கள் (ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயம் வீரமுனை), பிரதம அதிதியாக ஏ ம். கனீபா (பிரதேச செயலாளர் சம்மாந்துறை), பி. பரமதயாளன் (உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திருக்கோவில்), ஆர். இராமசந்திரன் (வைத்தியர் - போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு) ஜே.செந்தில்நாதன் (முகாமையாளர் ஆர் டி பி வங்கி), கே. ரஜினிகாந்த் (முகாமையாளர் வி ஓ சி மல்வத்தை கிளை) ஏ. பிரதீபன் (பொறியியலாளர்) எஸ். வினுஜன் (பொறியியலாளர்), ஆர். கோபிநாத் (வைத்தியர் - தம்பிலுவில் ஆயுர்வேத வைத்தியசாலை) சிறப்பு அதிதிகளாக ஜனாப் எம் கே. இப்னு அசார் (பொலிஸ் நிலய பொறுப்பதிகாரி-சம்மாந்துறை) எஸ். கோணேசமூர்த்தி (அதிபர் வீரமுனை ஆர். கே. ம் . பாடசாலை), திரு கே.ரவி (செயலாளர் ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயம் வீரமுனை) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு அதில் பல போட்டியாளர்கள் பங்குப்பெற்றி பெறுமதி மிக்க பரிசில்களை வெற்றி கொண்டனர். இவ் மைதானத்தில் இடம்பெற்ற முக்கிய விளையாட்டுகளாக சறுக்கு மரம் ஏறுதல், ஆமை ஓட்டம், பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், மா ஊதி காசு எடுத்தல், மெதுவான சைக்கில் ஓட்டம், பனிஸ் உன்னல், யானைக்கு கண் வைத்தல், கிடுகு இழைத்தல், றஸ்க் சாப்பிடுதல், தலையணை சமர், முட்டை எறிந்து பிடித்தல், சங்கீத கதிரை, சித்திரை பாப்பாவை கண்டுபிடித்தல், தேங்காய் துருவுதல், தடைதாண்டி ஓட்டம், வினோத உடை போட்டி, அணிகளுக்கு இடையிலான அஞ்சலோட்ட போட்டி என்பன குறிப்பிட தக்கவையாகும்.
இவ் விழாவில் அதிதிகள் மற்றும் அதிபர் சேவைக்கு தெரிவானோர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யபட்ட மாணவர்களும் பாராட்டி கெளரவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.