ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் மகோற்சவம் - கொடியேற்றம்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் (01.07.2016) இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
சோழ இளவரசி சீர்பாததேவியினால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயமானது மிகவும் தொன்மைவாய்ந்த ஆலயமாக கருதப்படுகின்றது.
பத்து தினங்கள் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளதுடன் தினமும் சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளதுடன் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜைகளும் நடைபெறவுள்ளது. வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை பாற்குடபவனியும், பிற்பகல் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.