ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ஆம் நாளாகிய நேற்று (06.07.2016) புதன்கிழமை வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு விசேட பூசையாக மாம்பழத் திருவிழா இடம்பெற்றது. மேலும் இன்று பி.ப 4.30 மணிக்கு சுமங்கலி பூசையும் மாலை 6.30 மணிக்கு தீர்த்தக்கேணியில் தெர்ப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.