வீரமுனை R.K.M பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு
2016 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டில், அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, நாடளாவியரீதியில் இன்று இடம்பெற்றது.
வீரமுனை R.K.M பாடசாலையில் புதிதாக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, இன்றைய தினம் (14.01.2016) ஆம் திகதி காலை 10.00 மணியளவில், பாடசாலையின் அதிபர் திரு.s.கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதி பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இப் பாடசாலையில் புதிதாக முதலாம் தரத்தில் 47 மாணவர்கள் இணைந்துகொண்டனர். புதிதாக இணைந்த மாணவர்களுக்கு எமது இணையக் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.