எம்மவர் நிகழ்வுகள்
வீரமுனை படுகொலை நினைவுதினம் இன்று – ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் 1990-08-12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
அறநெறி பாடசாலை மாணவர்களினால் திருஞானசம்பந்தர் குருபூசை தினம் அனுஷ்டிப்பு
வீரமுனை திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களினால் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருஞான சம்பந்தர் குருபூசை தின விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வீரமுனை சமூக அபிவிருத்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட மாபெரும் இலவசக் கருத்தரங்கு
மேற்படி அமைப்பானது கல்வி மற்றும் சமூக அபிவிருத்தியை இலக்காக கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய விசேட பொதுக்கூட்டம்
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழா கணக்கறிக்கை தொடர்பான விசேட பொதுக் கூட்டம் 12/07/2015 அன்று காலை 10 மணியளவில் கல்முனை நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இராம கிருஷ்ண மகா வித்தியாலய சேவைநலன் பாராட்டு விழா - 2015
கமு/சது/வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் திரு S.சந்திரமோகன் அவர்களின் ஓய்விற்கான சேவை நலன் பாராட்டு விழா 30.07.2015 அன்று பி.ப 12.00 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலுள்ள பிள்ளையார் மலையில் புதிதாக விநாயகர் சிலை திறப்பு
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய பிள்ளையார் மலையில், வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் அருள் ஆசியுடன், வீரமுனையை சேர்ந்த இங்கிலாந்து லிவர்பூல் பொதிகை நிறுவனத்தினரால் சுமார் 21 அடி உயரமுள்ள விநாயகர் திருவுருவச்சிலை திறந்து வைக்கபட்டது.
வீரமுனையிலிருந்து சொறிக்கல்முனைக்கு செல்லும் நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
சம்மாந்துறையில் இருந்து சொறிக்கல்முனைக்கு செல்ல வந்த மோட்டார் சைக்கிளும் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இருந்து வீரமுனையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
வீரமுனையிலிருந்து கதிர்காம கொடியேற்றத்தை காண செல்லும் பாதயாத்திரிகர்கள்
வீரமுனையிலிருந்து கதிர்காம முருகனின் கொடியேற்றத்தை காண ஒரு தொகை பக்த அடியார்கள் இன்று (06/07/2015) வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்.