எம்மவர் நிகழ்வுகள்
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்
செந்நெல் வயல் நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் 28/06/2015 அன்று ஞாயிற்றுக்க்கிழமை 108 சங்குகளைக் கொண்டு சிறப்பாக இடம்பெற்றது.
திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை 23.06.2015 பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டத்தை தொடர்ந்து அன்று இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழாவும் வைரவர் மடையும்
வரலாற்றுச்சிறப்பு மிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 11ஆம் நாளாகிய வியாழக்கிழமை (24/06/2015) பூங்காவனத் திருவிழா, வைரவர் மடை என்பன சிறப்பாக இடம்பெற்றதுடன் உற்சவ நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான திங்கட்கிழமை (22.06.2015) வேட்டைத் திருவிழா சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவமும் கொடியிறக்கமும்
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய புதன்கிழமை (24/06/2015) தீர்தோற்சவம், கொடியிறக்கம் இடம்பெற்றது.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் சுமங்கலி பூசையும் தெற்பத் திருவிழாவும்
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஏளாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (21.06.2015) சுமங்கலி பூசை மற்றும் தெற்பத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் பண்டைத் தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் பறைசாற்றிய பிரசித்திமான விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும்.
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் மாம்பழத் திருவிழா
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆறாம் நாளான 20.06.2015 அன்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.