கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர் உற்சவம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இலங்கையில் ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திரத்தேரோட்டம் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன. பண்டைய காலம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுவரும் மரபுவழிமுறையின் கீழ் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் குடி முறையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

இன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் பிள்ளையாரின் சித்திரத்தேர் முன்னே செல்ல தான்தோன்றீஸ்வரனும் உமையம்மையும் பின்னால் செல்லும் பக்திபூர்வமான நிகழ்வு நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டதுடன் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

k.cholai 1

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

k.cholai 2

அதிகம் வாசித்தவை