வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, கல்வி அபிவிருத்தி குழுவினால் நடாத்தப்பட்ட பாராட்டு விழா
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, கல்வி அபிவிருத்தி குழுவினால், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும்
அதிபர் சேவை போட்டி பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று காலை 10.00 மணிக்கு வீரமுனை R.K.M வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமாகிய கௌரவ திரு.கவிந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் M.கேந்திரமூர்த்தி, ஆலய தலைவர், செயலாளர், பாடசாலையின் அதிபர் மற்றும் எமது கிராமத்திலுள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வருடம் அதிகூடிய 14 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்த மாணவர்களும், மருத்துவ பீடத்துக்கு தெரிவான ஒரு மாணவனும் கலைத் துறையில் மூன்று மாணவர்களும் மற்றும் அதிபர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட மூன்று பேருக்கும் பாராட்டி கௌரவித்தோடு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.