மாபெரும் இரத்த தான முகாம்

வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று வீரமுனை சாயி நிலையத்தில் 17.09.2016 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்றது. இவ் இரத்த தான முகாமில், கருணையுள்ளம் கொண்ட 26 பேர் கலந்துகொண்டு தங்கள் உதிரத்தை தானமாக வழங்கினர். இவர்களுக்கு சாயி நிலையத்தின் சார்பான மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.