வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தின நிகழ்வு

வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் 2016.08.26 ஆம் திகதி அன்று புருசோத்தமனான முழுமுதல் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு
4ம்கிராமத்திலுள்ள வறிய மக்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள் மற்றும் விதவைப்பெண்கள் என இனம் காணப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், படுக்கை விரிப்புக்கள் மற்றும் தலையணைகள் போன்ற பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஸ்ரீ சத்திய சாயி அவதராமானது, ஸ்ரீ கிருஷ்ணரின் மறுஅவதாரமாக உலக பெருன்பான்மை மக்களால் போற்றி வணங்கப்படுகின்றது.
தகவல் - v.பிரேமச்சந்திரன் (உபதலைவர் )