அண்மையவர் நிகழ்வுகள்

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்த்தான மஹோற்சவத் திருவிழா

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்த்தான மஹோற்சவத் திருவிழா 05.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14ஆம் திகதி தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

சிறப்பாக இடம்பெறும் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய உற்சவ நிகழ்வுகள்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சவம் கடந்த 17ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நாளாந்தம் வசந்த மண்டப பூசை தொடர்ந்து சுவாமி உள்வீதி வெளிவீதி உலா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

மல்வத்தையில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற தொழிநுட்ப பாடநெறிகள் சம்பந்தமான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு 27/07/2015 அன்று மல்வத்தை பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

காரைதீவில் சுவாமி விபுலானந்தரின் 68 வது சிரார்த்த தின நிகழ்வுகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தரின் 68வது சிரார்த்ததின நிகழ்வுகள் சுவாமி பிறந்த இடமாகிய காரைதீவில் அமையப் பெற்றுள்ள விபுலாந்த ஞாபகார்த்த நினைவாலயத்தில் இடம்பெற்றது.

காரைதீவு மாவடிக்கந்தனுக்கு பாவனாபிஷேகம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவானது சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.இத்திருவிழாவின் விஷேட அங்கமாக முருகப்பெருமானுக்கு பாவனாபிஷேகம் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற உகந்தை முருகன் ஆலய கொடியேற்றம்

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (17.07.2015) சிறப்பாக நடைபெற்றது.

ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் முத்துச்சப்பர பவனி

சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 64வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு முத்துச்சப்பர பவனியொன்று இன்று காரைதீவில் சிறப்பாக இடம்பெற்றது.

நெல்வயல்களில் கபில நிறத்தத்தியின் தாக்கம் அதிகரிப்பினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

கடும் வரட்சி மற்றும் பனியின் காரணமாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் வேளாண்மைப்பயிர்களுக்கு கபில நிறத் தத்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.08.2015 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.

மல்வத்தையில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி

அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞர் கத்திக் குத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.