மட்டக்களப்பு உதவும்கரங்கள் அமைப்பினரால் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு கற்றல்உபகரணங்கள், பணப்பரிசு வழங்கிவைப்பு

மட்டக்களப்பு உதவும் கரங்கள் (எஸ்டோ) அமைப்பினரால் ஊறணி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பணப்பரிசும் (5.4.2018) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

ஊறணி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் நன்மைகருதி மட்டக்களப்பு உதவும் கரங்கள் அமைப்பினருக்கு அதிபர் எம்.யோகானந்தராசா அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இவ்வுவகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலத்தில் மிகவும் கஸ்டப்பிரதேச பாடசாலையாக இவ்வித்தியாலயம் திகழ்கின்றது.இப்பாடசாலையில் கல்விகற்று கடந்த வருடம் (2018) க.பொ.சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்து 7A,2B பெறுபேற்றை பெற்றுக்கொண்ட வறுமைப்பட்ட மாணவியான ஜே.திலக்சிகாவுக்கு உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ஏ.ஞானம் அவர்களினால் பத்தாயிரம் (10,000)ரூபா மாணவியின் கற்றல்தேவைக்காக வழங்கி வைக்கப்பட்டது.2500 ரூபா பெறுமதியான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

ஊறணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் எம்.யோகானந்தராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம், உதவும்கரங்கள் அமைப்பின் தலைவர் ஏ.ஞானம், செயலாளர் எஸ்.ஜெயராசா, பிரதியதிபர் ரீ.செம்பாப்போடி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்

help 2

help 2

அதிகம் வாசித்தவை