வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று செவ்வாய்க்கிழமை (19/06/2018) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.
வீரமுனை ஆண்டியர் சந்தியில் அமைந்துள்ள முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து வரப்பட்டு சீர்பாததேவி கண்டெடுத்த ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. முன்னே மேள தாளங்கள் முழங்க இரு யானையின் மீது பூசகர் பாற்குடம் எடுத்துவர அதன் பின்னே பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பெண்கள் பாற்குடம் எடுத்து வந்து எம்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.
மேலும் இன்று பிற்பகல் 4.00 அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று உலங்கு வானூர்தி மூலம் பூமழை சொரிய, யானைகள் பவனியுடன் ஊர்வலகமாக கொண்டுவரப்பட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.