வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - திருக்குளிர்த்தி
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இன்றைய தினம் (29.05.2018) அதிகாலை திருக்குளிர்த்தி இடம்பெற்றது. கடந்த செவ்வாய் கிழமை கதவு திறத்தலுடன் உற்சவம் இனிதே ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.வைகாசிப் பூரணை திருக்குளிர்த்தி தினமாக வரும் பொருட்டு ஆரம்பமாகும் கண்ணகியம்மன் உற்சவம் பல்வேறு பாரம்பரியங்களுடன் இடம்பெறுகின்றன. கதவு திறத்தலோடு ஆரம்பமாகி ஊர்வலம் செல்லுதல்,கல்யாணக்கால் வெட்டுதல், திருக்குளிர்த்தி பாடுதல் என எட்டுத் தினங்கள் நடைபெற்றது. பூஜைகள் எட்டுத் தினங்கள் நடைபெறுவது மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வருகிறது. கதவு திறந்ததும் ஊர் முழுவதுமே புனிதமான ஓர் புதுப் பொலிவினைப் பெறும். மக்கள் மச்சம் மாமிசம் தவிர்த்து வீடு வாசல்களில் புனிதம் பேணி வீதிகள் பெருக்கி மெருகூட்டி பத்தினித் தெய்வத்தின் அருள்வேண்டி நிற்பர். வைகாசிப் பூரணை திருக்குளிர்த்தி நடைபெறும்.