வீரமுனை வின்னர்ஸ் அணியினர் நடாத்திய மாபெரும் கிரிக்கட் சுற்று போட்டியின் இறுதி போட்டி
வீரமுனை வின்னர்ஸ் அணியினர் மற்றும் வீரமுனை சிவ சேவா சமூக சேவை மன்றம் இணைந்து நடாத்திய மாபெரும் கிரிக்கட் சுற்று போட்டியானது கடந்த சில தினங்களாக எமது வீரமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வந்தது.
இதில் இறுதி போட்டிக்கு வீரமுனை விஸ்ணு அணியும் வீரமுனை எவரஸ்ட் அணியும் தெரிவானது . இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எவரஸ்ட் அணியினர் எட்டு ஓவர்கள் முடிவில் 48 ஓட்டங்களை எடுத்தனர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வீரமுனை விஸ்ணு அணியினர் 5வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தனர். இப் போட்டியின் ஆட்ட நாயகனாக யாதவனும் தொடரின் சிறந்த ஆட்ட நாயகனாக நிஜந்தனும் தெரிவு செய்ய பட்டனர்.