எம்மவர் நிகழ்வுகள்
மாபெரும் இரத்த தான முகாம்
வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று வீரமுனை சாயி நிலையத்தில் 17.09.2016 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்றது. இவ் இரத்த தான முகாமில், கருணையுள்ளம் கொண்ட 26 பேர் கலந்துகொண்டு தங்கள் உதிரத்தை தானமாக வழங்கினர்.
வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு
வீரமுனை விதவைகள் நலன்புரி சங்கத்தின் வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (14/08/2016) இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆலோசகர் K.பொன்னம்பலம், கிராம உத்தியோகத்தர் மற்றும் சங்கத் தலைவர் மு.சுசிலா, பொருளாளர் பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டதுடன் இதில் 50 பேர் பலனடைந்தனர்.
வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தின நிகழ்வு
வீரமுனை பகவன் ஸ்ரீ சத்திய சாயி நிலையம் 2016.08.26 ஆம் திகதி அன்று புருசோத்தமனான முழுமுதல் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு
வீரமுனை படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம்
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (12/08/2016) வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இடம்பெற்ற பூசை நிகழ்வுகள்
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (25.08.2016) வியாழக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி குழுவினால் 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி, இலவச கருத்தரங்கு ஒன்றை நேற்று (01.08.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் வீரமுனை R.K.M பாடசாலையில்நடாத்தியது.
தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு
திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் நிகழ்ச்சிச் திட்ட உத்தியோகத்தர் தலைமையில் பெற்றோர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றிய, நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி
வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றியத்தினால் நிதி சேகரிக்கும் முகமாகவும் ஒன்றியத்தினுள் உதயமாகியுள்ள Black Sparrow புதிய அணியின் உருவாக்த்தினை முன்னிட்டும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த மாதமளவில் ஆரம்பமானது.