வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க மட்டு / அம்பாறை - வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி அலங்கார வாகனங்களில் அடியார்கள் உள்வீதி, வெளிவீதி உலா வருதலும்
6ஆம் நாளான சனிக்கிழமை (16) மாலை மாம்பழத்திருவிழாவும்,
7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் 3.30 மணிக்கு சுமங்கலி பூசையும், மாலை 6.30 மணிக்கு தீர்த்தத் கேணியில் தெற்பத்திருவிழாவும்,
8ஆம் நாளான திங்கட்கிழமை (18) பிற்பகல் 4.00 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் இரவு 8.00 மணிக்கு சப்பறத்திருவிழாவும்,
9 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (19) காலை 7.30 மணிக்கு பார்குடபவனியும் பிற்பகல் 4.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் இரவு 7.00 மணிக்கு பச்சை சாத்துதல் நிகழ்வும்,
10 ஆம் நாளான புதன்கிழமை (20) காலை 9.30 மணிக்கு தீர்தோற்சவம் மாலை 6.30 மணிக்கு திருவூஞ்சல் தொடர்ந்து கொடியிறக்கம், சண்டேஸ்வரர் பூஜை, ஆச்சார்ய உற்சவமும்
11ஆம் நாளான வியாழக்கிழமை (21) காலை 9.00 மணிக்கு பிரயாச்சித்த அபிசேகமும் இரவு 7.00 மணிக்கு பூங்காவனத் திருவிழா, வைரவர் மடையுடன் உற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.