செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ரோஜா
பலவகை மரபணு ரீதியான தாவரங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது ஸ்வீடன் நாட்டு லின்கோபிங் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆச்சரியத்தக்க வகையில் புதிய மின்னணு முறையில் ரோஜா செடியை உருவாக்கியுள்ளனர்.

செடியின் வாஸ்குலார் தொகுப்பில் மின்னணு சுற்று ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இந்த சுற்று, அச்செடிக்கு தேவையான தண்ணீர் மற்றும் இதர தாவர வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை விநியோகம் செய்கின்ற வகையில், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வயர்கள், சுற்றுகள் மற்றும் கண்காணிப்பு திரையை இதனுடன் இணைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.
தாவரங்கள் சிக்கலான இயற்கை வடிவமைப்பு கொண்ட உயிர்கள். பல அயனிக் சிக்னல்களை மற்றும் ஹார்மோன்களை தன்னகத்தே கடத்துகிறது. ஆய்வாளர்களால் பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட மின்னணு சிக்னல்கள், தாவரங்களின் வேதியியல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஒளிச்சேர்க்கைக்கென பிரத்யேக எரிபொருள் மின்கலம், சென்சார்கள், வளர்ச்சி ரெகுலேட்டர்கள் போன்ற சாதனங்கள் தாவரங்களின் வினைகளை கட்டுப்படுத்தவும், இடைமுகப்படுத்தவும், உள்ளே நடக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.