உணவிலுள்ள கலோரிகளை அளவிடும் ஸ்மார்ட் போன்

வழக்கமாக அறுசுவை உணவு அடங்கிய ஒரு உணவினைக் காணும்போது நாம் என்ன செய்வோம்? உடனே எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்ணுவோம். ஆனால் உடல் பருமனால் அவதிபடுபவர்கள் மற்றும் நோயால் அவதிபடுபவர்கள் போன்றோரால் அந்த மாதியான முடிவினை எடுக்க முடியாது. அவர்கள் உணவிலுள்ள கலோரிகளை எப்போதும் எண்ணி வருந்திக் கொண்டிருப்பார்கள். அத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்காகவே அறிமுகபடுத்தியுள்ள இந்த பயன்பாடு ஊட்டச்சத்தின் அளவைக் கண்காணித்து ஒரு சிறந்த டையட்டை பயனர்களுக்கு அழிக்க தயாராகியுள்ளது. இந்த பயன்பாட்டினைக் கொண்டு ஊட்டச் சத்து பற்றிய உங்கள் குறிக்கோளை அடைய உணவு பற்றிய அனைத்து தகவல்களையும் தந்து உணவின் வரையறையை கற்றுக் கொடுக்கிறது .
scio என்ற கையடக்க டையட் சென்சாரின் உதவியுடன் உணவிலுள்ள வேதி மூலக்கூறுகள் , ஊட்டச் சத்துகள் போன்றவற்றை ஆராய்ந்து அதனை ப்ளூடூத் நுட்பத்தின் வழியாக அருகிலிருக்கும் போனிற்கு டையட் சென்சார் ஆப் மூலம் அனைத்து தகவல்களையும் அனுப்பி விடும். அதில் உணவிலுள்ள கலோரிகள் ,புரதம் , கொழுப்பு,ஆல்கஹால் போன்ற அனைத்து தகவல்களும் அடங்கும் .
அந்த சென்சாரினை உபயோகிக்கும்போது ஒவ்வொருவரின் உணவுப் பழக்கத்தினையும் கண்காணித்து மொத்த கலோரிகளின் மதிப்பீட்டையும் அளந்து அதில் எவ்வளவு உணவை உனவினை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும்? எவ்வளவு உணவினை ஒருவர் நீக்கி கொள்ள வேண்டும்? போன்றவற்றை கணக்கிட்டு கூறுகிறது. இது நீரிழிவு நோய் , இதயக்கோளாறுகள் தொடர்பான நோய்கள் கொண்டவர்களுக்கு சிறந்த ஒன்றே. இதனால் நோயாளிகள் அவர்களின் உணவுக் கட்டுபாட்டை உணர்ந்து உ ண்ண ஏதுவாக இருக்கும். தடகள வீரர்கள் தங்களின் உடலை சீராக வைக்கவும் மற்றும் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இது கைகொடுக்கும் .
இந்த பயன்பாடு தற்போது CES – 2016ன் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது . scio டையட் சென்சாரை $250க்கு செலுத்தி அதன் முன் உத்தரவுகளைப் பெறலாம். தற்போதைக்கு டையட் சென்சார் பயன்பாட்டினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இதனை அடுத்த வருடத்திலிருந்தே பயனர்களுக்கு அறிமுகபடுத்த உள்ளனர்.