3D வடிவிலான பாதணிகள்

  3-D நுட்பத்தை பயன்படுத்தி காலணிகளை வாடிக்கையாளர்களுக்கு கடைகளிலேயே தயாரித்து தருகின்றனர். 3-D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை இதற்குமுன் நகைகள் ,ஆடை அணிகலன்கள், காரின் பாகங்களான ஜெட் இன்ஜின்,இனிப்பு வகைகள் (சாக்லேட்டுகள் ), உணவு வகைகள், போன்ற பலவற்றில் பயன்படுத்தப்பட்டது.
 
3​- D நுட்பம்.
சாதரணமாக பிரிண்டிங் செய்வதேன்றாலே பல சிக்கலான முப்பரிமாண வடிவத்தை பல உலோகங்களைக் கொண்டு ஒவ்வொறு அடுக்காக அமைத்து ஒரு பொருளை தயாரிப்பதாகும்.
3D printed XYZ shoes earl stewart designboom 02
 
ஒரு வடிவத்தை பதிவிறக்கம் செய்துவிட்டால் லேசர் அதற்குத் தகுந்த உலோகங்களின் உதவி கொண்டு அடுக்குகளை உருவாக்கி பொருளை தயாரித்து விடும்.
 
3-D பிரிண்டிங் காலணியில் பயனர்கள் தங்களது காலடிகளை வெவ்வேறு கோணத்தில் புகைப்படம் எடுப்பதனால் கணினியில் 3-D மாதிரிகளைத் தயாரிப்பது எளிதாக இருக்கும்.இதனால் வாடிக்கையாளர்களின் உயரம் ,எடை போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப காலணிகளை தயார் செய்யலாம். அனைத்து தகவல்களையும் கொடுத்தபின்பு வாடிக்கையாளர்கள் ஒரு ஜோடி காலணியைப் பெறலாம்.
 
இவ்வளவும் அழகுக்காக மட்டுமா ?
 காலணி உலகில் இது ஒரு புது அழகிற்காக மட்டுமல்லாமல் ஒரு சிகிச்சைக்காகவும் பயன்படுகிறது.ஆம் எலும்பு மற்றும் மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு வலி நிவாரணியாக இருக்கும்படி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் வெளிவந்த நைக்கின் பவர் காலணிகள்   விளையாட்டு வீரர்களின் கால்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. அதனால் ஒலிம்பிக் தடகள வீரர்கள்  எந்தவித இடையூறும்  இல்லாமல் விளையாட   ஏதுவாக  வடிவமைக்கப்பட்டது 
 
கண்டிப்பாக இந்த நுட்பம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டை புதுவிதமாக பார்க்கும் வகையில்   அமைந்தது  குறிப்பிடத்தக்கதே ! தற்போது கடைகளில் கிடைக்கும் சாதரண காலணிகளைப்  போன்றே எதிர்காலத்தில் அனைத்து  கடைகளிலும் 3-D பிரிண்டட்  காலணிகளைக்  காணலாம்.