ஆன்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன ?

இப்ப நீங்க ஒரு டெஸ்க்டாப் கணினி வைத்து இருக்கீங்க ,  அதில் பழைய விண்டோஸ் Os ( xp , 7, 8) இருக்கு , இப்ப அதில் விண்டோஸ்10 இன்ஸ்டால் செய்ய என்ன செய்வீங்க ? ஹார்ட் டிஸ்க் பார்மாட் செய்துட்டு பூட்டடபிள் சீடீ போட்டு 
அதில் இருந்து இன்ஸ்டால் செய்வீங்க இல்லையா ? அதே மாதிரி தாங்க இதுவும் . 

 


ஆன்ட்ராய்டில் வரும் ஆன்ட்ராய்ட் மென்பொருளை அழித்து  விட்டு உஙக்ளுக்கு பிடித்த உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் 
மாடல் சப்போர்ட் செய்யும் வேறு கஸ்டம் ரோம்களை இணையத்தில்  இருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் 

வழி முறை 


1.முதலில் BootLoader Unlock செய்ய வேண்டும் , பூட்லோடர் என்றால்  உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பூட் ஆவதற்கு தேவையான பைல்கள்  அங்கு ஸ்டோர் செய்து வைக்க பட்டிருக்கும் , அதை அன்லாக் செய்தால்  தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் 
 


2.அடுத்து "ரூட்டிங்" செய்யயணும் , ரூட் செய்வதால் நீங்கள் ஆன்ட்ராய்ட்  மொபைலில் எல்லா முக்கிய பைல்களையும் ஆக்ஸ்சஸ் செய்ய முடியும் . புதிய ரோம் இன்ஸ்டால் செய்வதற்கு இந்த இரண்டும் கண்டிப்பாக செய்யனும் 
 


3.பூட்லோடர் அன்லாக் செய்த பிறகு தான் கண்டிப்பாக ரூட் செய்ய வேண்டும்  இரண்டையும் செய்த பிறகு நீங்கள் உங்களுக்கு பிடித்த கஸ்டம் ரோம் இன்ஸ்டால்  செய்யலாம் 

ஆன்லாக்கிங் & ரூட்டிங் ஒவ்வொரு மொபைலிர்க்கும் வித்தியாசப்படும் ,  தப்பாக செய்தால் மொபைல் பூட்டாகமல் கூட போகலாம்  இணையத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து , தகுதியான  சாப்ட்வேர் மூலம்  ரூட் செய்ங்க.. விரும்பும் வசதிகளை அனுபவிங்க  

உங்கள் மொபைலை root செய்ய :http://tamilrockers....-kingo-root-v2/