கெத்து காட்டிய டோனி: ஐபிஎல் போட்டிகளில் இரண்டு புதிய சாதனைகள் படைப்பு

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

11-வது ஐபிஎல் சீசனின் 35-வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் டோனி அவுட்டாகாமல் 31 ஓட்டங்கள் எடுத்தார்.

இப்போட்டியின் மூலம் டோனி இரு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

அதாவது, ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்தவர்கள் பட்டியலில் ராபின் உத்தப்பாவுடன் டோனி முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

தற்போது டோனியும், உத்தப்பாவும் 32 ஸ்டெம்பிங் செய்துள்ளனர்.

அதே போல ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசிய சாதனையையும் டோனி படைத்துள்ளார். நடப்பு சீசனில் அவர் இதுவரை 27 சிக்சர்களை விளாசியுள்ளார்.

கடந்த 2013-ல் 25 சிக்சர்கள் அடித்திருந்த டோனி தற்போது அதை முந்தியுள்ளார்.