2016 ஆம் ஆண்டுக்கான எண் கணித சோதிட பலாபலன்கள்

01, 10, 19, 28
வாழ்க்கையில் புதிய முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். இடைநிறுத்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக செயற்பட வாய்ப்புகள் ஏற்படும். புதிய திட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு இவ்வாண்டு சுபீட்சமான ஆண்டாக அமையும்.எதிர்பார்த்த நல்ல விடயங்கள் இனிதே நடைபெறும்.
திருமணம் நடக்காதவர்களுக்கு இவ்வாண்டு நிச்சயம் திருமணம் நடைபெறும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். மங்கள நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறும். திடீர் பணவரவுகள்,புனித யாத்திரைகள்,வெளிநாட்டு வேலைவாப்புகள்,வண்டி வாகன யோகம்,புதுமனை புகுதல் போன்றன உண்டு.
சமூக உதவிகள், குடும்ப உதவி, ஒத்தாசைகள் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

02, 11, 20, 29

இவ்வாண்டு உங்களுக்கு மந்தமான ஆண்டாகவே அமையும். மனநிலையில் தளம்பல் நிலை காணப்படும். எதிலும் பிடிப்பின்மை ஏற்படும். தன்னம் ​பி​க்கையை தளரவிட வேண்டாம்.
பண விரயம் ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருவாய்கள் ஏற்படும். செலவுகளில் அதிக கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை. திடீர் நிகழ்வுகள் மனதில் பொறுமை இழக்கவைக்கும். பொறுமை அவசியம். அவசர முடிவுகள் ஆபத்தை விளைவிக்கும். இறைவழிபாடும், தன்னம்பிக்கையும் நன்மை பயக்கும்.

03, 12, 21, 30
இவ்வாண்டு பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. திருமண யோகம், வண்டி வாகன யோகம், புதிய நட்புகள், பதவி உயர்வுகள், உயர் கல்வி யோகம், பிரிந்தவர் ஒன்று சேர்தல், பழைய கடன்கள் தீரல், உடல் ஆரோக்கியம் இருக்கும்.
மே 21 இற்கு பின்னர் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, தொழில் கசப்புகள், உண்டாகும். இறை வழிபாடு, தன்னம்பிக்கை அவசியம்.

04, 13, 22, 31
வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். பொறுமை மிக அவசியம். சொந்த முயற்சியே வெற்றித்தரும். திடீர் பிரயாணங்கள் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் உண்டு.
பொருளாதார தடைகள் ஏற்படும். மனசோர்வுக்கு இடமளிக்க வேண்டாம். இறை நம்பிக்கையுடன் செயற்படவும். நட்பு ரீதியில் மிக நிதானம் தேவை. திடீர் பிரிவுக்கு இடமுண்டு. எதிர்பாராத வழக்கு வம்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. நிதானம் தேவை. எல்லா விடயங்களிலும் பொறுமை அவசியம். இவ்வாண்டு ஓரளவு நன்மை தரும்.

05, 14, 23
இவ்வாண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாகும். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். குடும்ப சுப நிகழ்வு, நீண்ட கால ஆசை ஈடேறுதல், கணவன், மனைவி ஒற்றுமை, திடீர் திருமணம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, புனித யாத்திரைகள், இடம்பெறும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி நிலவும். வழக்கு பிரச்சனை முடிவுக்கு வரும். முயற்சி வெற்றியளிக்கும்.

06, 15, 24
இவ்வாண்டு முயச்சிக்கேற்ற வெற்றி கிடைக்கும். காரியங்களை நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. வருவாயை மீறிய கடன் பெற வேண்டும். நிதானம், பொறுமை என்பன நல்லது. தொழில் பிரச்சனை ஏற்பட்டாலும் சமாளிக்க முடியும். சொந்த முயச்சிக்கேற்ற நல்ல உதவிகள் கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பின் நன்மை வரும்.

07, 16, 25
இவ்வாண்டு வெற்றி கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண தடைகள் நீங்கும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய நட்பினால் பண வருவாய் வந்துசேரும்.
சமூகத்தில் புகழ் வந்துசேரும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். 8 ஆம் மாதத்திற்கு பிறகு மிக நிதானம் தேவை. சட்ட பிரச்சனை, வழக்கு என்பவற்றில் சிக்கித்தவிக்கக்கூடும். இறை நம்பிக்கை தேவை.

08, 17, 26
இவ்வாண்டு உங்களுக்கு நிதானம் தேவை. மனதில் இனம்புரியாத கவலை,சந்தேகம் உண்டாகும். திடீர் பயணம் ஏற்படும். இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வாகன பிரயாணங்களில் அவதானம் தேவை. பொருட்கள் களவு போகும்.
நீண்டகால நட்பில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். பொறுமை, நிதானம் தேவை. மே மாதத்திற்கு பின் நன்மை ஏற்படும். சொந்த முயற்ச்சியால் திட்டம் நிறைவேறும். அரசாங்க உதவி, சமூக அந்தஸ்த்து உயரும்.

09, 18, 27
இவ்வாண்டு மனதில் அமைதி தென்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் கருத்து முரண்பாடுகள் விலகும். எதிர்பாராத விடயங்கள் நிறைவேறும். புதுமனை புகுதல், புண்ணிய சொத்துக்கள் கிடைத்தல் என்பவற்றிக்கு வாய்ப்புண்டு. கலந்தாலோசித்து முடிவெடுத்தால் இவ்வாண்டு நல்ல பலாபலன்கள் கிடைக்கும்.

மலரும் புத்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டாக அமைய இனிய வாழ்த்துக்கள்.