தானியங்கு கார் உற்பத்தியில் இணைந்து Samsung

தானியங்கு கார் உற்பத்தி முயற்சியில் கூகுள், ஆப்பிள், பைடுவு போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுவருகிறது. இதோடு தற்போது சாம்சுங் இணைந்துள்ளது. சாம்சுங் இந்த திட்டத்தினை பற்றிய எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் இருந்தனர்.1990களிலேயே சாம்சங்கின் தலைவராக லீ குன் ஹீ அவர்கள் இருந்தபோது தானியங்கு பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.ஆனால் 1997 ல் ஏற்பட்ட சில ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக அந்த திட்டம் திவாலாகி போனது. அதன் பின் தற்போது சாம்சங்கும் தானியங்கு காரினை இயக்குவதனைப் பற்றிய திட்டத்தில் சேர்ந்துள்ள அறிவிப்பை புதன் கிழமையன்று வெளியிட்டது.
இதற்காக சாம்சங் ஒரு குழுவினை நிறுவி செயலாற்ற உள்ளது.நாளுக்கு நாள் தானியங்கு கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாவதைப் பார்ப்பின் 2020க்குள் சாலையில் பல தானியங்கு கார்களை காணும் சாத்தியமுண்டு.