சவர்க்காரத்தை பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடிய ஸ்மார்ட் போன் அறிமுகம்

சவர்க்காரத்தை பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடிய ஸ்மார்ட் போன்களை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக பணம் கொடுத்து வாங்கும் ஸ்மார்ட் போன்களை நீரில் போட்டு விட்டால் பின் அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாதபடி ஆகிவிடும் . இந்த வேலைகளை பல நேரம்  வீட்டிலிருக்கும் குழந்தைகளே  செய்து  பார்த்திருப்போம்.மேலும்

சில சமயங்களில் நமக்கே மொபைல்  சாதனங்களின்  மீது இருக்கும் பாக்டீரியா போன்ற அழுக்குகளை  நீக்க நீரினை பயன்படுத்தி துடைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என  தோன்றும் என்று நினைப்போம் .ஆனால் அப்படி செய்தால் சாதனத்தை அதன் பின் உபயோகிக்க முடியாது என்பதால் சாதனத்தை  அழுக்கான தோற்றத்துடனேயே வைத்திருப்போம் . இது மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்கும் விதமாகவே ஜப்பானில் துவைக்கும் ஸ்மார்ட் போன்களை  அறிமுகபடுத்த உள்ளனர் .