க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு

நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று (04-08-2015) ஆரம்பமாகின்றது என பரீட்சைகள் ஆணையாளரை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ரீதியாக 2180 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் 326,072 பரீட்சாத்திகள் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சை எழுதுவதற்காக மண்டபத்திற்குள் செல்லும் பரீட்சாத்திகள் பேப்பர்ஸ், பின்கள், பைல் கவர்கள் கொண்டு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தோற்றவுள்ள பாடம், மொழி, கால அட்டவணை என்பவற்றையும் மாணவர்ககள் சரிபார்த்து கொள்வதனூடாக காலதாமதங்களை தவிர்க்க உதவும் என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுமாயின் பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக்கிளைக்கு 0112784208/011 2784537ஆகிய இலக்கங்களினூடாக அல்லது 1911 என்ற உடனடி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.