கூகுளின் நுண்ணறிவுடன் கூடிய குறுந்தகவல் பயன்பாடு

புதிதான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் குறுந்தகவல் பயன்பாட்டினை கூகுல் தயாராக்கி கொண்டு வருகிறது. மற்ற பயன்பாடுகளில் இல்லாத சிறப்பாக குறுந்தகவலில் நண்பர்களுடனான கலந்துரையாடல் சமயங்களில் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பதில்களை தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ஹேங் அவுட்டுகள் போன்ற குறுந்தகவல் பயன்பாடுகள் இருந்தாலும் அதனை அதிகமாக மக்கள் பயன்படுத்தாமல் போனதே இதற்கு காரணமாகும். மேலும் ஒரு சாதரணமான குறுந்தகவல் பயன்பாட்டில் உரையாடுவதைப் போன்றே இதிலும் உரையாடலாம். அதைத்தவிர கூடுதலாக பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் செயற்கை நுண்ணறிவும் சேர்க்கப்பட்டு உள்ளது.

இது நேரடியாக முகநூலின் siri மற்றும் M(facebook Messenger) போன்றவற்றுடன் போட்டியிடுவதாகவே உள்ளன. இந்த புதுவகை குறுந்தகவல் பயன்பாட்டினைப் பெயர் மற்றும் வெளிவரும் தேதி பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு கொண்டு உணவகங்கள் , ஆடைகள், பயணங்கள் போன்றவற்றில் வாங்குவதும் , முன் பதிவும் செய்வதுமான நுட்பங்களை இதுவரை செய்து வந்தது. இதனை குறுந்தகவல் பயன்பாடுகளில் கொண்டு வரும் கூகுளின் எண்ணம் பயனர்களை கண்டிப்பாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருவருக்கிடையேயான கலந்துரையாடலின் போது எழுப்பப்படும் சுவாரஸ்யமான வினாக்களுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை வழங்க கூகுள் தயாராகி வருகிறது.