கடவுச் சொல் இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழையலாம்

கடவுச் சொல்லே இல்லாத திட்டத்தினை கூகுள் மேற்கொண்டுள்ளது. மேலும் ஒருமுறை கூகுள் கணக்கில் id-யை பயன்படுத்தி நுழைந்த பின்பு நீங்கள் எந்த சாதனத்தில் இருந்து பயன்படுத்துகுறீர்கள் என்ற ஸ்மார்ட் போன் கேட்கும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட சாதனத்திலிருந்து உள்நுழைகின்ற சாதனத்தை பதிலளித்து ஒருங்கிணைப்பு செய்தால் போதுமானது.

இதனை நடைமுறைக்கு கொண்டு வரும் சோதனையை ரெடிட் பயனர் ரோஹித் பால் செய்து வருகிறார். இது கூகுள் கணக்கில் புதிதாக உள்நுழைபவர்களுக்கும் அல்லது தட்டச்சு செய்ய கடினமாக உள்ள சொற்களை கடவுச் சொல்லாக கொண்டவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
இதனால் உங்கள் தொலைபேசியில் கடவுச் சொல் இல்லாமல் அணுக உங்கள் கணிணியில் உங்கள் கூகுல் கணக்கை அணுகி அதில் உதாரணமாக நெக்சஸ் அலைபேசியைத் தேர்ந்தெடுத்து மின்னசலை அனுப்ப வேண்டும் . பிறகு நீங்கள் கடவுச் சொல் இல்லா உள்நுழைவை அனுமதிக்க உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி கிடைக்கும். அதில் ஆம் பட்டனைத் தேர்வு செய்தால் அதன் பின் அடுத்த முறையிலிருந்து கடவுச் சொல் என்ற ஒன்று இல்லாமலே கூகுல் கணக்கை அணுகலாம். இது போன்றே இதற்கு முன் குரோம்புக்கில் தொலைபேசியின் ப்ளுடூத் உதவியுடன் நுழையும் ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தை கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே..!!