நீரினால் பாதிப்படையாத ஐ7 விரைவில் அறிமுகம்

நீரினால் பாதிப்படையாத ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபடுகின்றது.  இந்த இது ஹைட்ரோபோஃபிக் எனும் கோட்டிங்குடன் உருவாக உள்ளது. இந்த கோட்டிங் உள்ளே இருக்கும் சர்க்கியூட்டுகளை தண்ணீர் புகுந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.இதனால் இது முற்றிலும் வாட்டர்ப்ரூஃபுடன் கூடியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஐஃபோனின் சிறப்பம்சம் என்னவெனில் ஹெட்போன் போன்ற போர்ட் சாதனங்களை இதனுடன் இணைக்கும் போதும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள "எலாஸ்டோமர் சீல்" சற்று தளர்ந்து அதற்கு வழிவிடும். ஹெட்ஃபோனை அகற்றியவுடன் இது மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி ஃபோனை cover செய்து காக்கிறது. இந்த எலாஸ்டோமர் சீல் ஆனது தண்ணீர், புகை, தூசு போன்றவற்றிலிருந்து காக்கிறது.