“சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையம்” அமைப்பின் ஏற்பாட்டிலும் திரு.ராஜன்(அவுஸ்ரேலியா) அவரின் அனுசரணையிலும் பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் பாடசாலையான பாலமுனை, திராய்க்கேணி அரசினர்
தமிழ் கலவன் பாடசாலை 55 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.s.யோகராஜா தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு சிட்னி உதய சூரியன் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் மற்றும் அமைப்பின் ஆலோசகர்களான திரு.s.மணிமாறன்(அதிபர்,காரைதீவு இ.கி.ச.பெண்கள் பாடசாலை),திரு.p.நடேசலிங்கம்(ஆசிரியர்,அட்டபளம் விநாயகர் பாடசாலை ), மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் காரைதீவு “மனித நேயம்”அமைப்பினால் மங்கள விளக்கு ஒன்றும் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்-கபிலன் காரைதீவு