அவுஸ்ரேலியாவினை சேர்ந்த சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மல்வத்தை கணேசபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அப் பாடசாலையில் முதன் முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன் போது சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.