-
Published: 04 October 2015
சம்மாந்துறை தழிழ்க் குறிச்சியில் பன்னெடுங்காலமாக குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவமானது இன்று புரட்டாதித் திங்கள் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(04) காலை 9.00 மணியளவில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 06.10.2015 செவ்வாய்க்கிழமை பாற்குட பவனியும் (காலை 9.00மணியளவில் ஸ்ரீ கோரக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்படும்) 10.10.2015 சனிக்கிழமை அன்று வீரகம்பம் வெட்டலும் 12.10.2015 திங்கட்கிழமை அன்று மதியம் சக்தி பூசையும் மாலை நோற்புக்கட்டல் ஆராதனைகள் இடம்பெற்று 13.10.2015 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீ மிதிப்பு வைபவத்துடன் சிறப்புற நிறைவடையவுள்ளது.
20.10.2015 செவ்வாய்க்கிழமை மாலை வைரவர்,இடும்பன் பூசை நடைபெறும். உற்சவகாலத்தில் கிரியைகள் யாவும் அமரர்.மாணிக்கம் அவர்களின் சிஷ்யன் திரு.சி.சதாசிவம் தலைமையில் தினமும் பகல் 12.00 மணிக்கும் மாலை 7.00 மணிக்கும் நடைபெறும்.
தகவல்: பத்மராஸ் கதிர்