-
Published: 30 November 2015
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாவிஷேக தின சங்காபிசேகம் நேற்று (29.11.2015) ஞாயிற்றுக்கிழமை, சங்காபிசேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது 108 சங்குகளைக் கொண்டு சங்காபிசேகம் இடம்பெற்றதுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.