நடுநிசியில் காரைதீவில் யானைகள் அட்டகாசம்

காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையம் மீண்டும் யானைத்தாக்குதலுக்கிலாக்கியுள்ளது. இதனால் நிலையத்தின் வடபுற மதில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.கூடவே அங்கிருந்த பயிர்பச்சைகளும் துவம்சம்செய்யப்பட்டுள்ளன.


இச்சம்பவம் இன்று (9)நள்ளிரவு 1மணியளவில் இடம்பெற்றுள்ளது. முன்பொருதடவை கிழக்குப்புற மதில் யானையால் சேதமாக்கப்பட்டிருந்தது.

கமநலசேவைநிலையப்பொறுப்பதிகாரி எம்.சிதம்பரநாதன் கூறுகையில்: நள்ளிரவு 1மணியளவில் தகவல்கிடைத்ததும் இங்குவந்தேன். உடனே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தேன். வாகனமில்லை இப்போ வரமுடியாது என்றார்கள். அப்போ யானை வந்து அனைத்தையும் முடித்துவிட்டுப்போனதன்பின்பு அவர்கள் வருவார்களா? அப்படியானால இவர்கள் எதற்கு? எமது நிலையத்தில் அறையும் சகல வசதிகளையும் செய்துதருகின்றேன். வாருங்கள் என்று முன்பு பலதடவைகள் அழைத்தற்கும் அவர்கள் வரவில்லை. இதுதான் நிலைமை என்றார்.

நிலையக் காவலாளி கே.ரவிக்குமார் கூறுகையில்:  1மணியளவில் நாய்கள் குரைக்கும் சத்தம்கேட்டு கண்விழித்தேன். எதிரே மதில்மேலால் யானை நின்று தும்பிக்கையை உள்ளே நீட்டியது.
மறுகணம் 7யானை வெடிகளை கொழுத்தினேன். அது அசையவில்லை. 3சீனவெடிகளைக்கொழுத்தினேன். நகரவில்லை. பின்னர் செய்வதறியாது சாக்கை மண்ணெண்ணையில்நனைத்து தீப்பந்தம் போலாக்கி விசிக்க யானை நகர்ந்தது. அதற்குள் மதிலையும் தள்ளி பயிர்களையும் சேதமாக்கியது. என்றார்.

 

apcc 1

apcc 1

apcc 1

apcc 1

 

அதிகம் வாசித்தவை