ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 65வது குருபூசை தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரதபவனி

பாரத நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசன் மகனாக அவதரித்து ஈழமணி திருநாட்டின் இல்லமெல்லாம் நடமாடித்திரிந்து தன்னை ஒரு பித்தனாகவும் கேலி பண்ணுவதற்குரியவராகவும்  வெளிக்காட்டி உள்ளன்புடன் நாடி வந்த பெரியார்களின் மனோநிலைக்கு ஏற்ப அருளுரைகளையும் அற்புதங்களையும் வெளிக்காட்டி சித்தராக பரிணமித்து காரேறுமூதூராகிய மட்டக்களப்பு காரைதீவு புனித பதியின் மூலகுரு மூர்த்தியாய் ஜீவசமாதி நிலையில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கின்ற ஜீவ சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 65வது குருபூசை தினத்தை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரதபவனி ஊர்வலமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15.07.2016ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காரைதீவு,தம்பட்டை(உள்வீதியூடாக)​,தம்பிலுவில்(பிரதான​ வீதி),திருக்கோவில்(மணிக்கூட்டுச் சந்தி),விநாயகபுரம்(கப்புவனார் வீதி),விநாயகபுரம்(சித்தி விநாயகர் ஆலயம்),விநாயகபுரம் (மத்திய​ வீதி),மீண்டும் திருக்கோவில்(மணிக்கூட்டுச் சந்தி),சித்திர​ வேலாயுத​ சுவாமி அம்மன் உலா வரும் வீதியூடாக​, தம்பிலுவில் (கமநல​ திணைக்கள​ வீதி), தம்பட்டை மீண்டும் காரைதீவை வந்தடையும்.

தகவல்: பத்மராஜ் கதிர்

 

அதிகம் வாசித்தவை