தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சம்மாந்துறைக்கு விஜயம்

தேர்தல் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் சமய நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) பிற்பகல் சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.


அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் விசேட உரையினை மௌலவி கலீலுர் ரஹ்மான் நிகழ்த்தியதோடு, மௌலவி யு.எல். அமீன் அவர்களினால் துஆப்பிராத்தயையும் இடம்பெற்றது.


சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மைய அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம். நக்பரினால் “ஜனநாயக மனிதன்” என்ற பட்டம் சூட்டி பொன்னாடை போரத்திக் கௌரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்வில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் அஷ்ஷேக் எம்.எம். முகம்மட், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ. அமீர், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

unnamed

unnamed 1

unnamed 2

.unnamed 5

அதிகம் வாசித்தவை