சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் கொடியேற்றம் இன்று ஆரம்பம்

காண்போர் உள்ளங்களைக் கவரும் பாங்கில் இயற்கைஎழிலும் வளமும் செந்நிறகழனிகளும் புடை சூழ்ந்து காணப்படமத்தியில் அமைந்துள்ளது சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலயம்.

அனைவரையும் கத்தோலிக்கர்களாகக் கொண்ட இக் கிராமத்திற்கு சுமார் 360 ஆண்டுகளுக்குமுன் கத்தோலிக்கமதம் கொண்டுவரப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சாந்தகுரூஸ் எனப் பெயர் சூட்டப்பட்ட இவ்ஆலயமே இலங்கையில் முதன் முதல் தோற்றுவிக்கப்பட்ட சாந்தகுரூஸ் ஆலயம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது என்பது உண்மை.

யேசுபிரான் மரித்தசிலுவைமரத்தின் சிறுதுண்டு ரோமாபுரியிலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட இப்புனிதமான சிலுவைபேரருட் திருவெற்றிக் கனி ஆயர் அவர்களால் கோவையில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் பேணப்பட்டுவருவதும் ஒவ்வொருஆண்டும் செப்டெம்பர் மாதத்தில் 14 ஆம் திகதிபுனிதசாந்தகுரூஸ் நாதருக்குவிழா எடுப்பதும் இதேநாளில் தான். திருச்சிலுவைநாதருக்கு ஆராதனை செய்துபின் சுற்றுப்பிரகாரப் பவனியில் பக்தர்கள் அனைவரும் பங்கெடுத்து நன்றி செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி முக்திப்பேறுபெற்றவண. ஜோசப் வாஸ் அடிகளார் 1710 இல் விஜயம் செய்துதமதுதிருப் பாதத்தைப் பதித்துதிருப்பலிஒப்புக் கொடுத்துச் சென்றதும் சொறிக்கல்முனைமண்ணிற்குக் கிடைத்தமாபெரும் பாக்கியம் எனவரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.


18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொன்சால்வாஸ் சுவாமிகள் திருச்சிலுவை சிற்றாலயத்தைஓர் குடிசைவடிவில் அமைத்ததும் குறிப்பிலிருந்து தெரியவருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை 30 இற்கும் மேற்பட்டபங்குத் தந்தையர்களின் வழிகாட்டுதலினாலும் மிகச் சிறப்பாக இக் கிராமம் வளர்ந்துவருகிறது. இதற்குப் பக்கபலமாக 1976 ஆம் ஆண்டுமுதல் திருக்குடும்பக் கன்னியர்களும் 1989 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரைஅப்போஸ்தலிக்ககார்மேல் கன்னியர்களும் பங்குத் தந்தையுடன் இணைந்துஉதவிபுரிந்துவருவதுவழக்கம்.


இன்னுமொரு விசேடஅம்சம் யேசுவின் கல்லறைசொருபம் பலபலபுதுமைகள் புரியும் யேசுவின் சொருபம் இந்தியாவிலுள்ள தூத்துக்குடிஎனும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். தி;ருச்சிலுவைதிருத்தலத்தில் வீற்றிருப்பவரும் இவரேதான். பக்தர்கள் முழு நம்பிக்கையும் விசுவாசமும் பக்தியும் கொண்டுள்ளயேசுவின் கல்லறைசொருபம்தான் பாஸ்காநிகழ்விலும் காண்பிக்கப் படுகிறது.


இவ்வருடம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள இத் திருவிழா இம் மாதம் 11 ஆம் திகதிதிருகோணமலை–மட்டக்களப்பு மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்ஸ்லிசுவாம்பிள்ளை ஆண்டகை கொடியேற்றி ஆரம்பித்துவைக்க 14 ஆம் திகதி திருச்சிலுவையின் மகிமைநாளாம் அன்று காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திருப்பலிஒப்புக் கொடுக்கப்பட்டு மக்களின் ஆராதனைக்காக திருச்சிலுவையின் திருப்பாண்டம் வெளியில் எடுத்துவைக்கப்படும். திருவிழாத் திருப்பலி திருகோணமலை மறைமாவட்டஆயர் நோயல் இம்மானுவல் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும். மேலும் இவ் ஆலயத்தின் விசேட நிகழ்வுயாதெனில் தற்போதுள்ள பங்குத்தந்தையின் வழிநடத்துதலில் ஒவ்வொருவெள்ளிக் கிழமைகளிலும் குணமளிக்கும் வழிபாடுகளில் மக்கள் பங்குகொண்டுசுகம் பெறுவதும் தங்கள் தேவைகளை கடவுளிடமிருந்துபெற்றுக் கொள்வதும் மிகவும் சிறப்பம்சமாகும்.

அதிகம் வாசித்தவை