வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் விசேட பூசைகள் இடம்பெற்றதோடு, ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன், மு.இராஜேஸ்வரன், இரா.துரைரெட்ணம் மற்றும் கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், நம்பிக்கை ஒளியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜெயசிறில், வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுகராஜா, மாணவ மீட்புப் பேரவையின் தலைவர் எஸ். கணேஸ், ஆலய நிர்வாக சபையினர்,  முன்னாள் கிராம உத்தியோகஸ்தர் பொன்னுத்துரை மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 .massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

.massacre 1

அதிகம் வாசித்தவை