அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்குமான அறநெறிக் கல்விக்கான பயிற்சிக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையம் கடந்த 2003 ஆம் ஆண்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வளவினுள் ஆலயத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வந்தகாலங்களில் பொதுமக்களின் நன்கொடையால் ஒருதர்ம ஸ்தாபனமாக தனித்து இயங்கிவருகின்றது. இந்தஅபிவிருத்தி நிலையமானது சிறார்களை முழு நேரமாக பராமரிப்பது மட்டுமன்றி பல சமூக சேவைகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தி செயற்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இந்து மதவிழுமியங்களை பேணி சமயக்கல்வியையும் வளர்ப்பதற்காக “குருசாமிஐயர் அறநெறிப் பாடசாலை”என்ற பெயரில் ஓர் அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு வீரமுனையில் இயங்கிவரும் மற்றுமொறு அறநெறிப் பாடசாலையான திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலையுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்த அறநெறிப் பாடசாலை சேவை மூலம் பண்ணிசை ஓதும்பயிற்சி, பூமாலைகட்டும் பயிற்சி, பரதனாட்டிய வகுப்பு, கூட்டுப் பிராத்தனை போன்ற பலசமய பணிகளை செய்துவருகின்றது.இந்தவகையில் மேற்குறித்த இரண்டு அறநெறிப் பாடசாலைகளிலும் கல்விகற்கும் 350 மாணவர்களுக்குமான அறநெறிக் கல்விக்கான பயிற்சிக் கொப்பிகளை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையமானது ரூபா 20,000.00 செலவில் கடந்த 22.01.2017 அன்று வழங்கிவைத்தது.

இந்த நிகழ்வில் இல்லத்தின் ஸ்தாபகப்பணிப்பாளர் பொறியியலாளர் தா.வினாயகமூர்த்தி, அறநெறிப்பாடசாலை அதிபர்களான ச.சிவசுந்தரமூர்த்தி, க.கஜேந்தினி, கலாசாரஉத்தியோகத்தர் வீரமுனை இ.கி.மி.பாடசாலை அதிபர், ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார்ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அறநெறிஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 aranery 1

 aranery 1

 aranery 1

 aranery 1

 aranery 1

 aranery 1

 aranery 1

 aranery 1

 aranery 1

அதிகம் வாசித்தவை