இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சித்திபெற்ற திரு.பரமதயாளன் அவர்களை வீரமுனை சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் பாராட்டும் நிகழ்வு

எமது வீரமுனை கிராமத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் எமது மண்ணின் மைந்தனான பூபாலபிள்ளை பரமதயாளன் அண்மையில் நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீடசையில் சித்தி பெற்று எமக்கும் எமது கிராமத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

அதேவேளை இவர் அண்மையில் நடை பெற்ற பாடசாலை அதிபர் பரீடசையிலும் சித்தி பெற்று அண்மையில் அச்சேவையிலும் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் அவரை பாராட்டும் விதமாக வீரமுனை சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம், ஆலய குருக்கள், கல்வி அபிவிருத்திக் குழு, சீர்பாததேவி சமூக சேவைகள் மன்றம், பழைய மாணவர்கள் ஒன்றியம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சார்பாக சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் சார்பான பிரதிநிதிகள் இணைந்து பரமதயாளன் அவர்களை பாடசாலை முன்றலில் வாழ்த்தி கௌரவிக்கப்படடார். அதேவேளை சமூக கலாச்சார மேம்பாட்டு ஒன்றியம் வீரமுனை மண்ணில் பல சமூகநலம் சார் அரிய சேவைகளை புரிந்துவரும் நிலையில் அதன் பிரதிநிதியான பூபாலபிள்ளை பரமதயாளன் இச்சித்தியெய்தது அதன் சேவையை மேலும் வலுப்படுத்த உறுதுணையாய் அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளை இல்லை.

thaya 1

thaya 1

thaya 1

thaya 1

thaya 1

thaya 1

thaya 1

 தகவல்: வீரமுனை சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம்

அதிகம் வாசித்தவை