திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நிகழ்வு

திருவெம்பாவை விரதம் என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். மாணிக்கவாசகர் திரு வண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றதே திருவெம்பாவை பாடல்கள் ஆகும்.

விரதத்தின் பத்து நாட்களும் கிராம வீதி வழியாக திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடுவதும் ஆலயத்தில் திருவெம்பாவை பாடல்கள் பாடுவதும் மரபாகும். இவ் விரதத்தினை கன்னிப்பெண்கள் நோற்பது சிறப்பம்சம் ஆகும்.

 

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் ஒன்பது நாட்களாக அனுஸ்டிக்கப்பட்ட இவ் விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டானர்.

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

Trvenpa 2

அதிகம் வாசித்தவை